×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் எந்தவித உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் தற்போது எந்தவித முடிவோ அல்லது உத்தரவோ பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்குகள் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுத்துவதாக கூறி ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் அகச்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜி எதிரான இரு வழக்கிலும் தொடர்பு இல்லாத ஒய்.பாலாஜி என்பவர்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். எனவே உச்ச நீதிமன்றம் இதனை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘ செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மனுக்களின் மீது எந்தவித முடிவோ அல்லது உத்தரவு பிறப்பிக்கவோ பிறப்பிக்கப்போவது இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் எந்தவித உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : minister ,Senthil Balaji ,Supreme Court ,New Delhi ,Minister Senthil Balaji ,Y. Balaji ,Supreme… ,Dinakaran ,
× RELATED ஜாமீன் உத்தரவு மறுஆய்வு அமைச்சர்...