×

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 2025 டிசம்பருக்குள் குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜு கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்தார். அது வருமாறு:

மதுரை மேற்கு செல்லூர் ராஜு (அதிமுக): உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் எப்போது குடமுழுக்கு நடத்தப்படும்? வீரவசந்தராயர் மண்டபம் எப்பொழுது புதுப்பிக்கப்படும்? அமைச்சர் சேகர்பாபு: மீனாட்சி அம்மன் திருக்கோயிலை பொறுத்தளவில் சுமார் 63 திருப்பணிகள் அதாவது 40 பணிகள் உபயதாரர்களாலும், 23 திருப்பணிகள் திருக்கோயில் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகளை விரைந்து முடித்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்ற வகையில் நிச்சயமாக குடமுழுக்கு நடத்தி தரப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 2025 டிசம்பருக்குள் குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi Amman ,Temple ,Kutaroo ,Minister ,Sekharbhabu ,Chennai ,Aimuka ,MLA ,Cellur Raju ,Madurai Meenadashi Amman ,Hinduism ,Madurai Meenakshi Amman Temple ,Dinakaran ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா கோலாகலம்