- செட்டிகுளம்
- நாகர்கோவில்
- ரவுண்டானா
- செட்டிகுளம் சந்தி
- மேயர்
- மகேஷ்
- அலுவலகம்
- நாகர்கோவில்
- செட்டிகுளம்
- தின மலர்
நாகர்கோவில்: நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்படும். கட்டிடங்கள் ஆக்ரமிப்பில் இருந்தால் அகற்ற வேண்டும் என மேயர் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவில் கலெக்டர் அலுவலக ரவுண்டானா சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் முடிந்து சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது. தற்போது சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக குழாய் பதிக்கப்பட்ட பகுதியில் ஒன்றரை அடி ஆழத்துக்கு ேதாண்டி ஜல்லி கலவை போடப்படுகிறது. பின்னர் அவை நன்றாக உலர்ந்து சம நிலைக்கு வந்த பின், தார் போடப்படும். 900 மீட்டர் நீளத்துக்கு ஒன்றரை அடி ஆழம் தோண்டப்பட்டு ஜல்லி கலவை நிரப்பும் பணி நடக்கிறது.
இந்தநிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று காலை கே.பி. ரோட்டில் ஆய்வு செய்தார். ஏற்கனவே இந்த ரோட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், பேக்கிரிகள் கழிவுகளை மழை நீர் வடிகாலில் விட கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. போதிய அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மழை காலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் மழை நீர் வடிகால் ஓடை விரிவாக்கம் செய்து கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேயர் மகேஷ் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவர் ஜவகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை ஆய்வு செய்த மேயர் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக ஆலோசித்தார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி இதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செட்டிக்குளம் சந்திப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் மேயர் உத்தர விட்டார். அந்த பகுதியில் உள்ள டீக்கடைகளில் திறந்த வெளியில் எண்ணெய் பலகாரங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வைத்து விற்பனை செய்தனர். இதை கண்டித்த மேயர், திறந்தவெளியில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை அகற்ற உத்தரவிட்டார். மேலும் சாலை ஓரம் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நான்கு சக்கர வாகனங்களை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டனர். அங்கிருந்து கேசவதிருப்பாபுரம் பகுதியில் ஆய்வு செய்த மேயர், அந்த பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
The post ரவுண்டானா அமைக்க வசதியாக செட்டிக்குளம் சந்திப்பில் ஆக்ரமிப்பு கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.