கொடைக்கானல், டிச. 9: கொடைக்கானல் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடந்தது. முன்னதாக கொடைக்கானலை சேர்ந்த அனைத்து கிறிஸ்தவர்கள் சார்பில் ஏரிச்சாலை அருகில் இருந்து கிறிஸ்தவர்கள் மற்றும் குழந்தைகள் தலையில் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்தும், கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வேடமடைந்தவர்கள் வழி நடத்தும் விதமாகவும் ஊர்வலமாக சென்றனர். லாக் எண்டு தேவாலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. துவக்க ஜெபம், துவக்க பாடல்கள், கிறிஸ்து பிறப்பை விளக்கும் கிறிஸ்தவ பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், உள்ளிட்டவைகள் நடைபெற்றன.
முன்னதாக இந்த ஊர்வலத்தை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு கொடைக்கானல் வட்டார அதிபர் அருட்தந்தை சிலுவை மைக்கேல் ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் சிஎஸ்ஐ தேவாலய பாஸ்டர்கள், பெந்தகோஸ்தே சபையைச் சார்ந்த பாஸ்டர்கள், இறை மக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கொடைக்கானல் கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் சலித் விஜய் தலைமையில் அமைப்பினர் செய்திருந்தனர்.
The post கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் appeared first on Dinakaran.