×

புளியந்தோப்பு பகுதியில் மாவா தயாரித்த 2 பேர் கைது: 7 கிலோ பறிமுதல்

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் வீட்டிலேயே மாவா தயாரித்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 கிலோ மாவாவை பறிமுதல் செய்தனர். புளியந்தோப்பு பி.எஸ்.முத்து நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாவா தயாரித்து விற்கப்படுவதாக புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சிபுக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் அந்த வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு 25 பாக்கெட்டுகளில் மாவா இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக ராஜேஷ்குமார் (எ) கபாலி (34) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் ஓட்டேரி திடீர் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் (36) என்பவரிடமிருந்து இவர் மாவா பொருட்களை வாங்கியது தெரிய வந்தது. இதனையடுத்து வெங்கடேஷ் வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரது வீட்டில் இருந்து சுமார் 7 கிலோ மாவா மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜர்தா பொருட்கள், மிக்சி, ரூ.2500 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், வெங்கடேஷ் (36) என்பவரையும் கைது செய்தனர். கைதான இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post புளியந்தோப்பு பகுதியில் மாவா தயாரித்த 2 பேர் கைது: 7 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mava ,Puyanthoppu ,Perampur ,Puyanthopu ,Pulianthoppu ,B. S. ,Pulianthopu ,Inspector ,Muthu Nagar ,Dinakaran ,
× RELATED காதலிக்க பெற்றோர் எதிர்ப்பு..? மாணவி...