×

ஒரே நேரத்தில் படகுகள் திரும்பி வந்ததால் காசிமேட்டில் மீன்கள் விலை சரிந்தது: ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.650க்கு விற்பனை

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற படகுகள் கடந்த சில நாட்களாக புயல், மழை காரணமாக ஆந்திரா உட்பட பல்வேறு மீன்பிடி துறைமுகங்களில் தஞ்சம் அடைந்திருந்தன. அந்த படகுகள் நேற்று முன்தினம் இரவு ஒரே நேரத்தில் திரும்பி வந்தன. நூற்றுக்கணக்கான படகுகள் திரும்பி வந்ததால் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் ஆனதால் அனைத்து மீன்களையும் விற்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் விசைப்படகில் இருந்து மீன்களை கொண்டு வந்தனர்.

ஆனால் தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், தேவைக்கு அதிகமாக சிறிய ரக மீன்கள் வந்ததாலும் மீன்களின் விலை மிகக் குறைவாக காணப்பட்டது. நேற்று மீன் வாங்க வந்திருந்த அதிகளவு மீன்களை வாங்கிச் சென்றனர். நேற்று ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.650க்கும், வவ்வால் ரூ.450க்கும், சங்கரா ரூ.350க்கும், இறால் ரூ.300க்கும், நண்டு மற்றும் கடமா ரூ.250க்கும், சிறிய வகை மீன்கள் குறைந்த விலையிலும் விற்கப்பட்டது.

இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறியதாவது: கிட்டத்தட்ட படகுகள் கடலுக்குச் சென்று 20 நாட்களுக்கு பின் வந்தன. 6 நாட்கள் ஆந்திர துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களுக்கு ஐஸ்கட்டியை தவிர வேறு எதையும் பயன்படுத்துவதில்லை. ஒரே இடத்தில் படகுகள் நின்றதால் மீன்கள் சற்று தளர்ந்து போய் இருந்தன. நேற்று நூற்றுக்கணக்கான படகுகள் வந்தன. ஒரு படகில் செல்ல ரூ.7 லட்சம் வரை செலவு ஆகும். கிட்டத்தட்ட ரூ.1.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பணியாளர்களுக்கும் பொருத்த நஷ்டம். ஏற்றுமதி ரக மீன்கள் கிடைத்தால்தான் மீன்பிடி உரிமையாளர்களுக்கு இனி லாபம் கிடைக்கும். சில்லறை விலையில் விற்றால் லாபம் கிடைக்காது. இவ்வாறு கூறினர்.

The post ஒரே நேரத்தில் படகுகள் திரும்பி வந்ததால் காசிமேட்டில் மீன்கள் விலை சரிந்தது: ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.650க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kasimat ,CHENNAI ,Kasimedu ,Andhra ,
× RELATED சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்; காசிமேடு, மெரினாவில் மீனவர்கள் திரண்டனர்