- கருமேனி நதி
- எபென்குடி
- நெல்லை
- தூத்துக்குடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம்.கே.
- ஸ்டாலின்
- தூத்துக்குடி
- தின மலர்
உடன்குடி,டிச.9: நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் கருமேனி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என பலத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உடன்குடி உதிரமாடன்குடியிருப்பு கிராம விவசாய சங்க தலைவர் கணேசன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இதில் கூறியிருப்பதாவது: நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்காக உருவாக்கபட்டது தான் கண்ணடியான் கால்வாய் திட்டம். கடந்த 2023ம்ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்து வெள்ளோட்டம் பார்த்து 100% நிறைவு பெற்றதாக கூறினார்.
வைகுண்டம் அணைக்கட்டு வழியாக கடலுக்கு வீணாக செல்லும் உபரி நீரை கண்ணடியன் அணைக்கட்டில் இருந்து கருமேனி ஆற்றின் வழியாக மணப்பாடு கடலுக்கு திருப்பி விட வேண்டும், இப்படி செய்வதால் நெல்லை மாவட்டத்தில் 26,557 ஹெக்டர் விளைநிலமும், 13,481விவசாய கிணறுகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2563 ஹெக்டர் விளை நிலங்களும், 959 விவசாய கிணறுகளும் மேலும் கருமேனி ஆற்றில் உள்ள சுமார் 25 தடுப்பு அணைகளிலும் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும். அதனால் கடலுக்கு செல்லும் உபரி நீரை வெள்ள நீர் கால்வாய் மூலம் தண்ணீர் பெரும் உரிமையை சட்டபூர்வமாக்கி அரசு ஆணையாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post விவசாய நிலங்களை பாதுகாத்திட கருமேனி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கோரிக்கை appeared first on Dinakaran.