- பாஜக
- எங்களுக்கு
- இந்தியா
- காங்கிரஸ்
- சசி தரூர்
- புது தில்லி
- அதானி
- ஜார்ஜ் சொரெஸ்
- ராக்பெல்லர் அறக்கட்டளை
- OCCRB
- அமெரிக்கா
- சஷி தரூர்
புதுடெல்லி,: இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிநாட்டு தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், ராக்பெல்லர் அறக்கட்டளை, ஓசிசிஆர்பி உள்ளிட்ட அமைப்புகளுடன் காங்கிரஸ் இணைந்து இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கிறது. ஓசிசிஆர்பியின் செயல்களை அமெரிக்க வெளியுறவு துறை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என பாஜ குற்றம் சாட்டியது. அமெரிக்க வெளியுறவு துறை மீதான பாஜவின் குற்றச்சாட்டை அமெரிக்க அரசு மறுத்துள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,பாஜவுக்கு ஜனநாயகம் அல்லது ராஜதந்திரம் புரியவில்லை என்பது தெளிவாகிறது. சர்வதேச பங்காளிகளுடன் நட்புறவைப் பேண வேண்டிய ஆளும் கட்சியின் பொறுப்பை அவர்கள் கவனிக்காமல் உள்ளனர். இந்த நடத்தை இந்தியாவுக்கு அவமானம் என குறிப்பிட்டுள்ளார்.
The post அமெரிக்கா மீது பாஜ குற்றச்சாட்டு இந்தியாவுக்கு அவமானம்: காங். எம்பி சசி தரூர் கருத்து appeared first on Dinakaran.