- இந்தியா கூட்டணி
- தேஜஸ்வி யாதவ்
- மும்பை
- மேற்கு வங்கம்
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
- இந்தியா
- காங்கிரஸ்
- சரத்சந்திர பவார்
- கோல்ஹாபூர், மகாராஷ்டிரா
மும்பை: இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என்று கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இது குறித்து தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் பிரிவின் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நேற்று கூறியதாவது: மம்தா பானர்ஜி ஒரு திறமையான தலைவர். இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என்று கூற அவருக்கு முழு உரிமையும் உண்டு.
இவ்வாறு சரத்பவார் கூறினார். ஆர்.ஜெ.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கருத்து கூறுகையில், மம்தா பானர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தலைவரை ஒருமித்த கருத்தோடு தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
The post இந்தியா கூட்டணி தலைவர் ஒருமித்த கருத்தோடு தேர்வு: தேஜஸ்வி யாதவ் கருத்து appeared first on Dinakaran.