×

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு: திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருத்துறைப்பூண்டி. டிச. 7: திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் 68-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் 68-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேதை சாலையில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பழனிச்சாமி, எம்எல்ஏ மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ உலகநாதன்,

ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். நகர திமுக சார்பில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சிக்கந்தர் தலைமையில் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மாலை அணிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு சுப்பிரமணியன், சாமிநாதன், ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

The post அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு: திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Memorial Day ,Thiruthurapundi ,Thiruthurapoondi ,Communist Party of India ,Vedai ,Tiruvarur district ,Tiruthurapoondi ,
× RELATED அம்பேத்கரின் 68வது நினைவு நாள்: மாவட்டம் முழுவதும் மலர் தூவி மரியாதை