கும்பகோணம், டிச.7: அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 18ம் தேதி வரை கும்பகோணம் கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடக்கிறது. கும்பகோணம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கஜேந்திரன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அஞ்சல் துறை பொதுமக்களுக்கு பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருகிறது. அதில் முக்கியமாக ஆதார் சேவை சிறுசேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் வாடிக்கையாளர்களின் அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சேவைகள் மற்றும் சிறு சேமிப்பு கணக்குகளுக்கு அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களிடம் மிகச்சிறந்த வரவேற்பினை பெற்று வந்தது.
அதில், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம்கள் கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அஞ்சல் துறையில், ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் முழுமையாக மத்திய அரசின் உத்தரவாதத்தில் உள்ளது. ஏனைய தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விட பொதுமக்களுக்கு குறைவான பிரீமியத்தில் நிறைவான போனஸ் வழங்கி வருகிறது. மேலும், பங்குச்சந்தை அபாயம் இல்லாதது. எனவே, அனைத்து வாடிக்கையாளர்களும், இந்திய அஞ்சல் துறையின் காப்பீட்டு திட்டங்களில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளப்படுகிறது. இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கும்பகோணம் கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆயுள்காப்பீடு முகாம் appeared first on Dinakaran.