×

உபி காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு: கார்கே நடவடிக்கை


புதுடெல்லி: மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களை வென்றது. இதன் மூலம் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. கடந்த 2019 தேர்தலில் காங்கிரசால் 1 இடம் மட்டுமே கிடைத்தது.தற்போது 6 இடங்களை கைப்பற்றியதால் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் 9 சட்ட பேரவை தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடந்தது. இதில், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இந்நிலையில், மாநில கட்சி அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவின்படி, உபி காங்கிரஸ் கமிட்டி, மாவட்ட, வட்ட உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் நிர்வாக அமைப்பும் கலைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தும் வகையில் கட்சியின் அனைத்து பிரிவுகளும் கூண்டோடு கலைக்கப்பட்டதாக மூத்த தலைவர்கள் கூறினர்.

The post உபி காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு: கார்கே நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : UP Congress ,New Delhi ,Congress ,Uttar Pradesh ,Lok Sabha elections ,UP ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் உ.பி...