×

3ம் நாள் உற்சவத்தில் சிம்ம வாகனத்தில் அண்ணாமலையார் பவனி 1008 சங்காபிஷேகம் நடந்தது திருவண்ணாமலை கோயில் கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ாணலை கார்த்திகை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவத்தில், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரரும், சிம்ம வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பலித்தனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 3ம் நாளான நேற்று அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள், அலங்கார ஆராதனை நடந்தது. வழக்கம் போல, நடை திறக்கும் போதே தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. அதைத்தொடர்ந்து, காலை 9 மணியளவில், அண்ணாமலையார் கோயில் கருவறை எதிரில் உள்ள பிரதோஷ மண்டபத்தில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 10.30 மணியளவில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து, மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தூப தீபாராதனைகளுடன், மேளதாளம் முழங்க நடந்த வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர். அதைத்தொடர்ந்து, இரவு 9 மணியளவில் 3ம் நாள் இரவு உற்சவம் தொடங்கியது. அப்போது, அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து ராஜகோபுரம் எதிரே பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் விண்ணதிர முழங்க, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், சிம்ம வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும் (பெரிய நாயகர்), வெள்ளி அன்ன வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்தனர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு வரை மாட வீதியில் திரண்டிருந்து பஞ்சமூர்த்திகளை தரிசனம் செய்தனர். அதைெயாட்டி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், மூன்றாம் நாள் விழாவை முன்னிட்டு திருக்கோயில் கலையரங்கத்தில், திருதொண்டர் புராணம் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல், கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதி அருகில் உள்ள புதிய திருமண மண்டபத்தில் ஆன்மிக ெசாற்பொழிவு நடைபெற்றது.

The post 3ம் நாள் உற்சவத்தில் சிம்ம வாகனத்தில் அண்ணாமலையார் பவனி 1008 சங்காபிஷேகம் நடந்தது திருவண்ணாமலை கோயில் கார்த்திகை தீபத்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Utsavam ,Annamalaiyar Bhavani 1008 sangabhishekam ,Tiruvannamalai Temple ,Karthikai Dibhatri ,Vizha ,Tiruvannamalai ,Tiruvannalai Kartika Deepatri festival ,Chandrasekhara ,Buddha ,Annamalaiyar ,Bhavani ,Thiruvannamalai Karthikai Deepatri Festival ,Simma Vahanam ,Tiruvannamalai Temple Karthikai Deepatri Festival ,
× RELATED பெரியகுளம் பெருமாள் கோயிலில் பவித்திர உற்சவம்