×

திருச்செந்தூரில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பஜனை

திருச்செந்தூர், டிச. 7: திருச்செந்தூரில் அனைத்து ஐயப்ப பக்தர்கள் சார்பில் ரயிலடி ஆனந்த விநாயகர் கோயிலில் சிறப்பு பஜனை நடந்தது. திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் பிறந்தது முதல் சபரிமலை யாத்திரை செல்ல மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வருகின்றனர். இவர்கள் சார்பில் திருச்செந்தூர் ரயிலடி ஆனந்த விநாயகர் கோயில் வளாகத்தில் ஐயப்ப சிறப்பு பஜனை பாதயாத்திரை குருசாமி அமெரிக்கா சர்மா தலைமையில் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு ஐயப்பன் பக்தி பாடல்கள் பாடி பஜனை செய்தனர்.

The post திருச்செந்தூரில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பஜனை appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Tiruchendur ,Railadi Ananda Vinayagar Temple ,Sabarimala Yatra ,Karthikai ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை