×

அம்பேத்கர் நினைவு நாளில் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் ஊர்வலம்: மாவட்ட செயளாலர் கைது

செங்கல்பட்டு: அம்பேத்கர் நினைவு நாளில் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஊர்வலத்தில் மாவட்ட செயளாலர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு சட்மன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் நினைவு நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயளாலர் தென்னவன் தலைமையில் மறைமலைநகரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி பேரணியாக சென்று மாலை அணிவிப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை மறைமலைநகரில் பேரணியாக செல்ல இருந்தனர். கூடுவாஞ்சேரி கூடுதல் காவல் ஆணையர் ராஜ் ப்ரின்ஸ் ஆரோன் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன், ஓட்டேரி காவல் ஆய்வாளர் ஆகியோர் பேரணிக்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயளாலர் தென்னவனை கைது செய்து மறைமலைநகர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தகள் கட்சியினர் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்த்து சாலை மறியலில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்துகள் கட்சி மண்டல செயளாலர் விடுதலை செழியன், நகர செயளாலர் மனிமாறன், நகர நிர்வாகிகள் ராஜ்குமார், அருள், வேதா, முகிலன், அன்பழகன், மாஸ்டர் ஆனந்த், மகளிர் அணி மாவட்ட செயளாலர் லதா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து பின்னர் மாலை விடுவித்தனர். இதனால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரத்திற்க்கும் மேலாக போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post அம்பேத்கர் நினைவு நாளில் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் ஊர்வலம்: மாவட்ட செயளாலர் கைது appeared first on Dinakaran.

Tags : Ambedkar Memorial Day ,Freedom Leopards march ,District Secretary ,Chengalpattu ,Liberation Tigers of India ,Liberation Cheetahs ,Satmanara Constituency Liberation Cheetahs ,
× RELATED அம்பேத்கர் நினைவுதினம் அனைத்துக்கட்சி சார்பில் பேரணி