- உலக எய்ட்ஸ்,
- நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம்
- கலெக்டர்
- கலாச்செல்வி மோகன்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- அலுவலக வளாக மக்கள் நல்லிணக்க மைய மாநாடு
- காஞ்சிபுரம் குளோபல் எய்ட்ஸ், நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் மற்றும் நுகர்வோர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் சார்பில் “உலக எய்ட்ஸ் தினம்” முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, கலெக்டர் தலைமையில் மாணவ – மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை, ஆட்டோவில் ஒட்டி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத்தொடர்ந்து, உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற்ற நுகர்வோர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) செந்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி, அரசு அலுவலர்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post காஞ்சிபுரத்தில் உலக எய்ட்ஸ், நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.