×

வண்டலூரில் இருந்து 10 ஆயிரம் மின் இணைப்பு நுகர்வோருக்கு அலுவலகம் மாற்றம்: செயற்பொறியாளர் தகவல்

செங்கல்பட்டு: வண்டலூர் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து 10 ஆயிரம் மின் இணைப்புகள் கொளப்பாக்கம் மின் வாரியத்திற்கு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மறைமலைநகர் தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.மறைமலைநகர் தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நிர்வாக காரணங்களுக்காக வண்டலூர் பிரிவு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட நெற்குன்றம், ஆலப்பாக்கம், சதானந்தபுரம், எஸ்எஸ்எம் நகர், சிக்னேச்சர் குடியிருப்பு, என்ஜிஓ காலனி, இஷா ஹோம்ஸ், காசா கிராண்ட் குடியிருப்பு, டிவிஎஸ் சாலை ஆகிய இடங்களில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்களின் மின் இணைப்பு குறித்த தகவல்கள் அனைத்தும் கொளப்பாக்கம் மின் வாரிய பிரிவு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இனிவருங்காலங்களில் மின் நுகர்வோர்கள் தங்களின் புதிய மின் இணைப்புகள், பெயர் மாற்றம், மின் துண்டிப்பு குறைகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் கொளப்பாக்கம் மின் வாரிய அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post வண்டலூரில் இருந்து 10 ஆயிரம் மின் இணைப்பு நுகர்வோருக்கு அலுவலகம் மாற்றம்: செயற்பொறியாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Chengalpattu ,Vandalur Power Board ,Kolpakkam Power Board ,Balasubramanian ,Tamil Nadu Power Distribution Corporation ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி தொகுப்பு வீடு கேட்டு...