×

காங்கிரஸ் கட்சி சார்பில் 102 பேருக்கு போர்வைகள்

மதுராந்தகம்: அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் மதுராந்தகம் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் 102 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன. மதுராந்தகம் நகரத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் மதுராந்தகம் தெற்கு பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே 102 சுகாதாரப் பணியாளர்களுக்கு போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அந்த கட்சியின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில், மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர் விழிக்குமார், திமுக நகர செயலாளர் குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நேருஜி, தங்கபெருதமிழமுதன், கிறிஸ்டோபர் ஜெயபால், கண்ணன், கங்காதரன், லோகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காங்கிரஸ் கட்சி சார்பில் 102 பேருக்கு போர்வைகள் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Madhurandakam ,Ambedkar Memorial Day ,Madhurandakam Municipality ,Ambedkar ,day ,Madhurandakam South Bypass road ,
× RELATED சோனியா காந்தியின் பிறப்பு முதல்...