×

ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பூங்கா, விளையாட்டு மைதானம்: திருமழிசை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

திருவள்ளூர்: அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் அமைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் திருமழிசை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. திருமழிசை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சித் தலைவர் ஜெ.மகாதேவன் தலைமையில் நடந்தது. இதில், செயல் அலுவலர் ம.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பிரியா சுரேஷ், மஞ்சுளா பாஸ்கர், விஜயலட்சுமி வேலு, கஸ்தூரி அருள், வீ.வேணுகோபால், ஜீவா சதீஷ், லதா ஜோதி, அனிதா சங்கர், ஆர்.ராஜேஷ், டி.எம்.ரமேஷ், ஜெயசுதா வேணுகோபால், ஆர்.பிரதீப், சி.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுதாங்கல் பகுதியில் உள்ள மைதானத்தில் கொட்டப்பட்டுவந்த குப்பைகளை முழுவதுமாக அகற்றப்பட்டு விட்டதால் காலியாக உள்ள இடத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாத அளவிற்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்துவதென்றும், பேரூராட்சிக்குட்பட்ட திருமழிசை – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சென்னை பப்ளிக் பள்ளி எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு மேலும், ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைப்பது என்றும்,

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், அதன் பராமரிப்பு செலவுக்காக நாள் ஒன்றுக்கு உரிமையாளரிடம் ரூ.500 வசூலிப்பது என்றும், விரைவில் அதற்கான அறிவிப்பை முறையாக அறிவித்துவிட்டு நடைமுறைப்படுத்தப்படும். மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தானியங்கி குளோரின் கலக்க நடவடிக்கை எடுப்பது, தற்போது ரூ.65 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பூங்கா, விளையாட்டு மைதானம்: திருமழிசை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Thirumazhisa municipal council ,Tiruvallur ,Tirumala ,Thirumazhisai ,Municipal ,Council ,President ,J. Mahadevan ,Thirumashisai Municipal ,
× RELATED பெஞ்சல் புயல் மழையால்...