×

பொங்கல் பண்டிகைக்காக பெரம்பலூரில் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரம்

பெரம்பலூர்: பொங்கல் பண்டிகைக்காக காடூர் கிராமத்தில் வெல்லம் தயா ரிப்புப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை என 3 விதங்களில் உருவாகிறது.பெரம் பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வேப்பூர், ஒன்றியத்தில் காணும் இடமெங் கும் கரும்புப் பயிருக்கான சொர்க்க பூமியாக திகழும் காடூர் கிராமத்தில், ஆண்டுக்கு சுமார் 600 ஏக்கர் பரப்ப ளவில் கரும்பு பயிரிடப்பட் டுவருவதால், ஆலைகளை நம்பியிராமல் இங்குமட்டும் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணிகளேநடந்து வருகிறது.காடூர் கிராமத்தி ல் மட்டும் சங்கர்(38), தர்மரா ஜ்(33), கண்ணன்(38), பெரி யசாமி(45), ராஜேந்திரன் (60) உள்ளிட்ட 10விவசாயி கள் தங்கள் வயல்களில் கரும்புக்கான கிரஷர் இய ந்திரத்தால் கரும்புச் சாற்றைப் பிழிந்துஎடுத்து, அகண்டக் கொப்பரைகளில் பாகாகக்காய்ச்சி பதமான தருணத்தில் அச்சுகளில் வார் த்து, அச்சுவெல்லமாகவும், அச்சுகளில் வார்க்காமல் கைகளில் உருட்டிப்பிடித்து உருண்டை வெல்லமாகவு ம், நாட்டுசர்க்கரையாகவும் 3 ரகங்களில் தயாரிக்கின் றனர். இதற்காக வெல்லம் தயாரிப்புப் பணிகளில் உத வ பழனி அருகேவுள்ள உடுமலைப்பேட்டை பள்ளபாளையம் பகுதியைச்சேர்ந்த சிலர் குடும்பத்தோடு வந்து தங்கி இங்குள்ள விவசா யிகளுக்கு உதவுகின்றனர்.வெல்லம் தயாரிப்பதற்காக 2,000லிட்டர் அளவு கரும்புச் சாறு கிடைத்தவுடன் அவற்றை அகண்ட இரும்புக் கொ ப்பரையில் காய்ச்சுகின்ற னர். அப்போது சிறிது சுண் ணாம்பு சேர்த்தால் கரும்புச் சாற்றிலிருந்து, தோகையி லிருந்த அழுக்குகள் பொங் கி பொங்கி நுரைக்கும்போ து அவற்றை சல்லடைக் கரண்டிகள் மூலம் வழித்தெடு த்து அகற்றிவிடுகின்றனர். பின்னர் கரும்புப் பாகு உரி ய பதம் வந்தவுடன் கொப்ப ரையைக் கவிழ்த்து பானை யில் ஊற்றிவைத்து அச்சி ல் வார்த்து அச்சுவெல்லமா கவும், பாகு சூடுஆறிய நி லையில் கைகளில் உருட்டி உருட்டி உருண்டை வெல்ல மாகவும் தயாரிக்கின்றனர். இவை தலா 30 கிலோ எடை கொண்ட சிப்பமாக பேக்கி ங் செய்து, நாமக்கல் மாவட் டம் பரமத்திவேலூர் தாலுக் கா, பிலிகல்பாளையம் வி வசாய விற்பனைச் சந்தை க்கும், பழனிஅருகே நெய்க் காரப்பட்டி சந்தைக்கும் அனுப்புகின்றனர். இ வைத்தவிர பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பிரபலமான மளிகை கடைகளுக்கும் சில்லறை யாக விற்பனை செய்கின் றனர். நவம்பர் இறுதியில் தொடங்கி டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மே மாதம்வரை வெல்லம் தயாரிப்புப் பணிகளுக்கா ன சீசனாக இருந்தாலும் டிசம்பர் இறுதி முதல் ஜன வரி முதல் வாரம் வரையி லான தயாரிப்புப் பணிகள் பொங்கல் பண்டிகையைக் கணக்கிட்டே அதிகளவு நட க்கிறது. டிசம்பர் தொடங்கி மே மாதம் வரை காடூரில் உள்ள 10கரும்பு கிரஷர்கள் மூலம் 25 ஆயிரம் சிப்பம் வெல்லம் உற்பத்தி செய் யப் படுகிறது.இது குறித்து வெல்லம் தயாரிக்கும் பிரபலமான விவசாயி சங்கர்(38) என்ப வர் தெரிவித்ததாவது : ஒரு சிப்பம் உருண்டை வெல் லம் ரூ 1,050க்கும், அச்சுவெ ல்லம் ஒரு சிப்பம் ரூ1150மு தல் 1200வரைக்கும் விலை கி டைக்கிறது.ஆனால் பொ ங்கலுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் 1 சிப்பம் ரூ.800 க்கு குறைந்துவிடும் என்றார்.வெல்லத்தை அர சே கொள்முதல் செய்து, ரே சன்கடை, கூட்டுறவு அமரா வதி விற்பனை அங்காடிக ளில் விற்பனைசெய்தால், பொதுமக்கள் முழுமையாகப் பயன்பெற முடியும் என் பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகஉள்ளது….

The post பொங்கல் பண்டிகைக்காக பெரம்பலூரில் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Pongal feast ,Ripp ,Kadur village ,Pongal Festival ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...