×

மூணாறு அருகே காட்டுயானை அட்டகாசம்

மூணாறு: மூணாறு அருகே காட்டுயானை அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு குட்டியார் வேலியில் காட்டுயானை அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் இறங்கிய காட்டுயானை கூட்டம், அங்கிருந்த சுந்தரம் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையை அடித்து சேதப்படுத்தியது. கடந்த 3ம் தேதி ஆட்டோ டிரைவரையும் தாக்கி உள்ளது. குட்டியார் வேலி பகுதியில் அரசிடம் இருந்து இலவசமாக கிடைத்த இந்த இடத்தில் தான் தோட்ட தொழிலாளர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வேறு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், சிறிய பெட்டி கடைகள் வைத்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். காட்டு யானை அட்டகாசம் அதிகரித்துள்ளதால், இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று குட்டியார் வேலி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மூணாறு அருகே காட்டுயானை அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Munnar ,Kerala State ,Idukki district ,Munnar Kutiyar ,Dinakaran ,
× RELATED சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு...