- தீபமாலா
- மலை கார்டிகை தீபத் திருவிழா
- அமைச்சர்
- சேகர்பபு
- சென்னை
- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
- இந்து சமய விவகாரங்கள்
- நுங்கம்பக்க்
சென்னை : திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, இன்று மாலை அங்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில், “சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனைத்தும் சரியாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு கோயில் சொத்துகளை அதிக அளவில் மீட்டுள்ளது தமிழ்நாடு அரசு; இதுவரை ரூ.6,955 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளது. ரூ.1,77,968 ஏக்கர் கோயில் நிலங்கள் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 24 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது.
இறையன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகிறது திராவிட மாடல் அரசு. பக்தர்களுக்கு முழுநேர அன்னதானம் திட்டம், அன்னதான கூடங்களை கட்டுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ள திராவிட மாடல் அரசு தயாராக உள்ளது. திருவண்ணாமலை மகாதீபம் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் இன்று மாலை (டிச.6) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தீபத் திருவிழாவில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தி. மலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, இன்று மாலை ஆலோசனை : அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.