×

கஷ்டங்கள் தீர திருச்செந்தூர் முருகனை வீட்டில் இருந்தே வழிபடும் முறை..!!

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு மனக்குறை, கவலை, கஷ்டம் இருக்கும். சிலர் தன்னை சுற்றி இருக்கும் பிரச்சனைகள் எப்படி வந்தது, இதை எப்படி தீர்க்க போகிறோம் என வழி தெரியாமல் தவிப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் எப்படிப்பட்ட கஷ்டமும் விலகி விடும்.

திருச்செந்தூர் முருகனை வழிபடும் முறை:
திருச்செந்தூர் முருகப் பெருமானின் படம் வீட்டில் இருந்தால், அந்த படத்தை துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறு வெள்ளை தாமரை பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பூக்களை உங்களுடைய கைகளால் ஊசி நூலால் மாலை போல் கோர்த்து கட்டுங்கள். இதை செவ்வாய்கிழமை தோறும் முருகப் பெருமான் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி வைத்து, போடுங்கள். தாமரை மாலையை போட்டு விட்டு, முருகா, என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் நீக்கி, எனக்கு அருள் செய்ய வேண்டும்” என மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

முருகா நீ ஒருவன் மட்டுமே எனக்கு துணை. உன்னை தவிர என்னை இந்த பிரச்சனைகளில், துன்பங்களில் இருந்து காப்பாற்ற வேறு யாரும் இல்லை. என்னுடைய துன்பங்கள் தீரும் வரை உன்னை விடுவதாக இல்லை. என திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனான முருகப் பெருமானின் திருவடிகளை முழுவதுமாக சரணாகதி அடைந்து, அவருடைய பாதங்களை இறுகப் பற்றிக் கொண்டு, முருகன் காப்பாற்றுவார், கவலைகளை தீர்ப்பார் என முழுவதுமாக நம்பி, இந்த பிரார்த்தனையை செய்ய வேண்டும்.

எத்தனை வாரங்கள் செய்ய வேண்டும்?
இது போல் ஒன்பது செவ்வாய்கிழமைகள் முருகனுக்கு வெண்தாமரை மாலை கட்டி போடுங்கள். ஒன்பது வாரங்கள் இந்த பரிகாரம் நிறைவடைவதற்குள் வாழ்வில் நல்ல மாற்றம் நிகழ்வதை கண்ணார காண முடியும். செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களிலும் முருகனின் துதி பாடல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாராயணம் செய்வது சிறப்பானதாகும். வேறு எந்த மந்திரமும் தெரியா விட்டாலும், “ஓம் சரவண பவ” என்றும் ஆறு எழுத்து மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தாலே முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முருகனின் அருளை பெறுவதற்குரிய மிக எளிமையான வழிபாடு இது. இந்த வழிபாட்டை தொடர்ந்த செய்து வந்தால், அனைத்து விதமான நலன்களையும் முருகப் பெருமான் அருள்வார்.

The post கஷ்டங்கள் தீர திருச்செந்தூர் முருகனை வீட்டில் இருந்தே வழிபடும் முறை..!! appeared first on Dinakaran.

Tags : Dera Tiruchendur Murugan ,Thiruchendur Murugan ,Thiruchendoor ,Dera Tiruchendoor Murugan ,
× RELATED வெளியே வந்த திருச்செந்தூர் யானை தெய்வானை