×

அறந்தாங்கி அருகே பள்ளி வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்து

அறந்தாங்கி, டிச. 5: அறந்தாங்கி அருகே தனியார் பள்ளி வாகனம் மின்மாற்றி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய டிரைவருக்கு தர்மஅடி விழுந்தது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் தனியார் பள்ளி வேன் நேற்று மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு அரசர்குளம் பேட்டைபகுதியில் வேகமாக சென்றபோது நிலை தடுமாறி மின்மாற்றி கம்பத்தில் மோதி உள்ளது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் டிரைவரை கண்டித்து உள்ளனர். அப்போது பள்ளி வேனை ஓட்டி வந்த டிரைவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் டிரைவரை அடித்து உதைத்து நாகுடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நாகுடி போலீசார் பள்ளி வேனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் மாணவ, மாணவிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

The post அறந்தாங்கி அருகே பள்ளி வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Arandangi ,Pudukottai district ,Arantangi ,Arasarkulam ,Dinakaran ,
× RELATED ஊழியர் திருமணத்திற்காக சிங்கப்பூரில் இருந்து அறதாங்கி வந்த முதலாளி