×

மரக்கன்றுகள் நடவு திட்டம் துவக்கம்

சோமனூர், டிச.5: கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் அரசூர் கிராமம் கானவேடப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடனும், வனத்துறை மற்றும் அரசூர் ஊராட்சி மன்ற உதவியுடனும் தமிழக அரசின் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் குறுங்காடுகள் திட்டத்தின் கீழ் சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் மூலம் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. சாந்தி கியர்ஸ் நிருவன தலைமை செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் அரசூர் ஊராட்சி தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகரன்,மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், துணை சுற்றுச்சூழல் பொறியாளர் சதீஷ்,இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ், அரசூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,வன ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் போது நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது.

The post மரக்கன்றுகள் நடவு திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Somanur ,Tamil Nadu Government ,Hindu Religious Charities Department ,Forest Department ,Arasur Panchayat Council ,Kanavedapperumal temple ,Sulur Union of Coimbatore district ,
× RELATED புதிய ரேஷன் கடை திறப்பு