போடி, டிச.5: போடி நகருக்குள் தனியார் பேருந்து உட்பட பல்வேறு வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போடி நகருக்குள் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டூவீலர்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. மேலும் இது போன்ற ஹாரன்களால், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அச்சமடைவதால் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் போடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களுடன் வந்த தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்ளை நிறுத்தி ஹாரன்களை பறிமுதல் செய்தனர். மேலும், மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டால் போக்குவரத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.
The post போடியில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.