×

பங்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

ஊத்தங்கரை, டிச.5: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கூடலூரை அடுத்த பாளையத்தை சேர்ந்தவர் முனுசாமி(40). இவர் ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். கடந்த 1ம் தேதி மதியம், கொங்கவேம்பு அருகேயுள்ள எஸ்.பட்டியை சேர்ந்த தமிழழகன்(25), வைரமலை(27), சிவமூர்த்தி(25), கபிலன்(24) ஆகிய நான்கு பேரும் பெட்ரோல் போட சென்றனர். அப்போது, முனுசாமியிடம், ஜிபேவில் பணம் அனுப்புவதாக கூறி, டூவீலருக்கு பெட்ரோல் போட்டுள்ளனர். ஆனால், அந்த பணத்தை அனுப்பி வைக்கவில்லை. மேலும், முனுசாமியிடம் செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த முனுசாமி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் 4பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பங்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Munusamy ,Kudalurai ,Arur ,Dharmapuri district ,Anumanthirtam petrol station ,Oothangarai ,Tamilazhagan ,Vairamalai ,S. Patti ,Kongavembu ,
× RELATED மது பதுக்கி விற்றவர் கைது