×

சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் மருத்துமனையில் அனுமதி


சென்னை: தமிழில் ‘லத்திகா’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, உள்பட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து, அவரது ரசிகர்கள் மத்தியில் ‘பவர் ஸ்டார்’ என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்படுபவர் டாக்டர் சீனிவாசன். திடீரென அரசியலில் ஈடுபட்ட அவர், கடந்த 2019 மக்களவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டார். சினிமா மற்றும் அரசியலை தாண்டி அவர் தொழிலதிபராகவும் இருக்கிறார். அவர் மீது சில புகார்கள் இருந்து வரும் நிலையில், பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், டாக்டர் சீனிவாசன் நேற்று சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே அங்கு அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

The post சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் மருத்துமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Power Star Hospital ,CHENNAI ,Dr. ,Srinivasan ,Power Star ,
× RELATED டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை...