×

3வது மாடியில் இருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலை

திருமலை: திருமணம் செய்து கொள்ளாமல் 3வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த காதல் ஜோடியிடையே ஏற்பட்ட தகராறில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆந்திர மாநிலம், அமலாபுரத்தை சேர்ந்தவர் பில்லிதுர்காராவ் (28). கேட்டரிங் தொழிலாளி. இவரும் ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த சுஷ்மிதா (23) என்பவரும் காதலித்துள்ளனர். திருமணம் செய்யாமலேயே இவர்கள் சில வருடங்களாக விசாகப்பட்டினத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகை எடுத்து வசித்துள்ளனர். இவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டில் இருந்த டி.வி ரிமோட், தேநீர் கோப்பைகள், கண்ணாடிப் பொருட்களை உடைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து குதித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து குடியிருப்பு காவலாளி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post 3வது மாடியில் இருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Bilidurgarao ,AP ,Amalapuram ,Hyderabad ,
× RELATED ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே லாரி...