தஞ்சாவூர், டிச. 3: சூரக்கோட்டை பகுதியில் சம்பா நெல் வயல்களில் உரம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் 3.50 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 2.80 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. மேலும், திருசையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவோணம், அதினாம்பட்டினம், சேதுபவாசத்திரம் உள்ளிட்ட பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்தது.
இந்நிலையில், கடந்த ஒருவார்த்திற்கு மேலாக தீவிரமாக பெய்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 2,500 ஏக்கரில் நெல் பயிர்கள் சாய்ந்துள்ளன. மேலும், இதுகுறித்து கணக்கீடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் என்னென்ன உரங்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூரக்கோட்டை, வாளமரக்கோட்டை, காட்டூர், உள்ளூர், மடிகை, வாண்டையார் இருப்பு உள்ளிட்ட பகுதியில் நடவு செய்யப்பட்ட பகுதியில் உரம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post சூரக்கோட்டை பகுதியில் சம்பா நெல் வயலில் உரமிடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.