- திருப்போரூர்
- மாற்றுத்திறனாளிகளின் சர்வதேச நாள்
- அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களின் உரிமைகளுக்கான தமிழ்நாடு சங்கம்
- திருப்பூர் ஒன்றியம்
- Manampathi
திருப்போரூர்: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 3ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய பல்வேறு கிராம கிளைகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. அதன்படி, மானாம்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் லிங்கன் சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். சிறுங்குன்றம் கிராமத்தில் ஒன்றிய துணை தலைவர் குப்பம்மாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அருள்ராணி கொடியேற்றி வைத்தார். அனுமந்தபுரம் கிராமத்தில் ஒன்றிய பொருளாளர் பூபதி சங்க கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.