×

சாரம் சரிந்து இருவர் பலி

தாம்பரம்: சேலையூர், ஐஓபி காலனியில் ஜேக்கப் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு, ராம்நாடு பகுதியை சேர்ந்த கனகராஜ் (47), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரூ (27) ஆகிய இருவரும் தங்கி வேலை செய்து வந்தனர். கட்டிடத்தின் 3வது மாடியில், நேற்று இவர்கள் சென்ட்ரிங் பலகைகளை கழற்றும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த கனகராஜ், சுரூ ஆகியோரை, சக ஊழியர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், கனகராஜ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுரூ நேற்று காலை உயிரிழந்தார். இதுவழக்கு சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாரம் சரிந்து இருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Jacob ,Selaiyur, IOP Colony ,Kanagaraj ,Ram Nadu ,Churu ,Odisha ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் தீவிர தூய்மை பணி: மேயர் தொடங்கி வைத்தார்