×

டெல்லியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை; ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்: கெஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி: டெல்லி பிதாம்புரா சேரி பகுதியில் வீட்டுக்கு வௌியே நின்றிருந்த மணீஷ், ஹிமான்ஷூ ஆகிய இரண்டு இளைஞர்களை உள்ளூர் சிறுவர்கள் சிலர் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயமடைந்த மணீஷ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கத்தி குத்து தாக்குதலில் பலியான இளைஞர் மணீஷின் உறவினர்களை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியில் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற முடியாவிட்டால் அதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்” என கூறினார்.

The post டெல்லியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை; ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்: கெஜ்ரிவால் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union minister ,Amit Shah ,Kejriwal ,New Delhi ,Manish ,Himanshu ,Pitampura ,
× RELATED ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து...