×

நீட் எதிர்த்து மதிமுக ஆர்ப்பாட்டம் மல்லை சத்யா கோர்ட்டில் ஆஜர்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வேலூர் சுப்பிரமணி, ஆரணி ராஜா, ஆற்காடு உதயகுமார் உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் ஆஜராகினர். வழக்கை விசாரித்த கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை வரும் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்….

The post நீட் எதிர்த்து மதிமுக ஆர்ப்பாட்டம் மல்லை சத்யா கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : MDMK ,NEET ,Mallai ,Satya Court ,Chennai ,general secretary ,Vaiko ,Mallai Satya Court ,Dinakaran ,
× RELATED தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்;...