×

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பை: க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே குடும்ப அட்டைதாரர்களுக்கு,  க.சுந்தர் எம்எல்ஏ பொங்கல் தொகுப்பு பை வழங்கினார். உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பு பை வழங்கும் விழா நேற்று நடந்தது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் காமாட்சி, ஒன்றியக் குழு உறுப்பினர் வீரம்மாள் மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப் வரவேற்றார்.  காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு  20 பொருட்கள் அடங்கிய பொங்கல்  தொகுப்பினை வழங்கினார்.இதில், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் காளிதாஸ், விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை,  பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சோமநாதபுரம், மானாம்பதி, குண்ணவாக்கம், சாலவாக்கம் ஆகிய பகுதிகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது….

The post குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பை: க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : K. Sundar MLA ,Uttara Merur ,K Sundar MLA ,Uttaramerur ,Tirupulivanam ,K. Sundar ,MLA ,
× RELATED இணையவழியில் ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்