×

8 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ரேஷன் கடை திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் நகரில் 8 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ரேஷன் கடையை காஞ்சிபுரம் எம்எல்ஏ திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி கச்சபேஸ்வரர் நகரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட ரேஷன் கடையை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருந்தது.  இதையடுத்து, எம்எல்ஏ எழிலரசனிடம், ரேஷன் கடையை திறந்து வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதைதொடர்ந்து, கச்சபேஸ்வரர் நகரில், நேற்று முன்தினம், மக்களின் பயன்பாட்டுக்கு ரேஷன்கடையை எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார். தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும், காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்அம்பி ஊராட்சி, மேல்அம்பி கிராமம், கொட்ராங்குளம் ஆகிய பகுதிகளில் ₹4.55 லட்சத்திலும், திம்மசமுத்திரம் ஊராட்சியில் ₹3.1 லட்சத்திலும், காஞ்சிபுரம் கைசாலநாதர் கோயில் தெரு பின்புறம் ₹7.67 லட்சத்திலும், வெங்கடாபுரத்தில் ₹7.39 லட்சத்தில் புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்தார்.தொடர்ந்து கச்சபேஸ்வரர் நகர் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்படுத்தும் வகையில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட். கே.ஆறுமுகம், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்விழி குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.எம். குமார் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post 8 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,MLA ,Kanchipuram Kachabeswarar Nagar ,Kanchipuram… ,
× RELATED உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றிய...