×

சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் கார் மோதி விபத்து

சங்ககிரி, டிச.3: சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென திரும்பிய லாரியின் பின்னால் மோதிய கார் விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்தவர் சுதர்சன சுவாமி(35). இவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்(32), முருகன்(50), கேசவன்(37), சேலத்தை சேர்ந்த திருமல்லேஸ்வரன்(44) ஆகியோரை காரில் ஏற்றுக்கொண்டு தருமபுரியில் இருந்து சங்ககிரிக்கு நேற்று சொந்த வேலையாக வந்தனர். மாலை 5 மணிக்கு சங்ககிரியில் இருந்து மீண்டும் தர்மபுரி நோக்கி சென்றனர். அப்போது கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஐயங்காட்டூர் என்ற இடத்தில், முன்னால் சென்ற லாரி, திடீரென இடது புறமாக திரும்பியது. கார் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. காரை ஓட்டிச்சென்ற சுதர்சனசுவாமி உள்பட 5 பேரும் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்ககிரி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அனைவரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து
வருகின்றனர்.

The post சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் கார் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Sudarsana Swamy ,Bommidi ,Dharmapuri district ,National Highway ,Dinakaran ,
× RELATED குரங்குகள் தொல்லையால் அவதி