×

ஆந்திர அரசு பேருந்தில் போதைப்பொருள் கடத்தியவர் கைது

திருத்தணி: ஆந்திரா அரசு பேருந்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்திய நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தனிப்படை எஸ்.ஐ பார்த்திபன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவிலிருந்து திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகளில் சோதனையிடப்பட்டது.

இதில், ஆந்திர மாநில அரசு பேருந்தின் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேக்கில் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருளை கடத்தியவர் திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்கு பதிவு செய்து விசாரணையில், சென்னை பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார்(43) என்பதும், ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருள் வாங்கி பேருந்தில் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆந்திர அரசு பேருந்தில் போதைப்பொருள் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra government ,Tiruthani ,Andhra border ,Chennai Tirupati National Highway ,Tiruvallur District ,
× RELATED திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு