×

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு..!!

சென்னை: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரசூரில் தேசிய நெடுஞ்சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அரசூர் பேருந்து நிறுத்தம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருச்சி – சென்னை சாலையை மூழ்கடித்தது. விக்கிரவாண்டி அருகே மழைநீர் தேங்கியுள்ளதால் சித்தனியல் இருந்து சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தம்

சாலை துண்டிக்கப்பட்டதால் ஆங்காங்கே வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் திருச்சி நோக்கி சென்ற வாகனங்கள் மேலும் முன்னேற முடியாமல் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு, போக்குவரத்து முடக்கம், வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் விழுப்புரம் மாவட்டமே ஸ்தம்பித்துள்ளது.

The post சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Trichy National Highway ,Chennai-Trichy National Highway ,Storm Fengel ,Viluppuram district ,National Highway ,Arasur ,
× RELATED மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று...