- அங்கலமான் கோயில்
- தராயூர்
- ஓஞ்சல் உற்சவம்
- அங்காளம்மன்
- கோவில்
- உயர்நிலைப்பள்ளி சாலை
- தரட்டியூர் சிக்கம்பிள்ளையார் கோவில்
- கார்த்திகை
துறையூர், டிச.2: துறையூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. துறையூர் சிக்கம்பிள்ளையார் கோயில் அருகே உயர்நிலைப் பள்ளி சாலையில் அங்காளம்மன் கோயில் உள்ளது. கார்த்திகை மாதம் அமாவாசையை முன்னிட்டு அங்காளம்மன் கோயில் மூலவருக்கு பால், பழம், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து புது வஸ்திரம் சாற்றி மலரலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டினர். இதையடுத்து உற்சவ மூர்த்தியை மலரலங்காரம் செய்து பல்லக்கில் வைத்து கோயில் பிரகாரத்தில் உலா எடுத்துச் சென்றனர். முடிவில் உற்சவ அங்காளம்மனை ஊஞ்சலில் வைத்து ஆட்டினர். அப்போது அங்காளம்மன் நாமவளிகள், அம்மன் வாழ்த்துப் பாடல்கள் பாடினர். இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அங்காளம்மன் கோயில் இளைஞர்கள் சார்பில் ஊஞ்சல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
The post மாநகர செயலாளர் அழைப்பு அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் appeared first on Dinakaran.