- திரிபுரா போக்குவரத்து அமைச்சர்
- சுஷாந்தா சவுத்ரி
- வங்காளம்
- இஸ்கான்
- சின்மோய் கிருஷ்ண தாஸ்
- இந்துக்களின்
- திரிபுரா போக்குவரத்து
- தின மலர்
அகர்தலா: வங்கதேசத்தில் இந்திய பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக திரிபுரா போக்குவரத்து துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி குற்றம் சாட்டினார். வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் இயக்குனர் சின்மோய் கிருஷ்ணா தாஸ் கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த இந்துக்களின் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அப்போது வங்கதேச கொடியை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திரிபுராவில் இருந்து வங்கதேசம் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து திரிபுரா போக்குவரத்து அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி கூறுகையில்,‘‘திரிபுரா அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று நேற்று முன்தினம் வங்கதேசம் வழியாக கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த நாட்டின் பிரம்மன்பாரிய மாவட்டம் பிஷ்வா ரோடு என்ற இடத்தில் சென்ற போது அந்த பஸ் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள் பஸ்சில் இருந்த பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய பஸ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திரிபுராவில் இருந்து அசாம் வழியாக கொல்கத்தா செல்வதற்கு,30 மணி நேரமாகிறது. வங்கதேசம் வழியாக செல்லும் போது பயண நேரமும் பாதியாக குறைவதோடு கட்டணமும் குறைவாக இருக்கிறது.
The post இந்திய பேருந்து மீது வங்கதேசத்தில் தாக்குதல்: திரிபுரா போக்குவரத்து அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.