×

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.16 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,980.50க்கு விற்பனை

சேலம்: நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.16 அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைக்கு காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. அவ்வகையில் இம்மாதம் தொடர்ந்து 9வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்களில் கூட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

அதே வேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை இம்மாதத்திற்கு ரூ.16 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,964.50 என இருந்த நிலையில், ரூ.16 உயர்ந்து ரூ.1980.50 ஆகவும், சேலத்தில் ரூ.1913 இருந்து ரூ.16 அதிகரித்து ரூ.1,929 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் டெல்லியில் ரூ.16 உயர்ந்து ரூ.1,818 ஆகவும், மும்பையில் ரூ.16 உயர்ந்து ரூ.1,770.50, கொல்கத்தாவில் ரூ.61 உயர்ந்து ரூ.1927.50 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்தில் ரூ.172 அதிகரித்துள்ளது. இந்த தொடர் விலையேற்றத்தால் உணவு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு உணவு பொருட்களின் விலையேற்றத்திற்கு சிலிண்டர் விலை உயர்வே காரணமாக அமைந்துள்ளது.

The post வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.16 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,980.50க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salem ,Federation of Oil Companies ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...