- திருப்பதி எருமாலயன் கோயில்
- திருமலை
- திருப்பதி
- ஏழு மலைகள்
- சுவாமி
- புயல் பெஞ்சல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திர
- திருப்பதி எருமாலயன் கோயில்
திருமலை: திருப்பதியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாத பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க கோயிலில் திரண்டுள்ளனர். இதனால் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்கின்றனர். பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திருமலையிலும் நேற்று முன்தினம் இரவு முதல் ெதாடர்ந்து இன்றும் விடிய விடிய கனமழை கொட்டியது. ஆனால் பக்தர்கள் கொட்டும் மழையிலும் சுவாமி தரிசனம் செய்தன்றனர்.
நேற்று 73,619 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,112 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ₹3.35 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 4 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொட்டும் மழையிலும் திரண்ட பக்தர்கள்: 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.