×

சென்னையில் 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உயர்வு: வினாடிக்கு 4,217 கனஅடி நீர்வரத்து

சென்னை: சென்னையில் 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு அதிகரித்துள்ளது. புதுச்சேரி அருகே நேற்று இரவு கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல். மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பெஞ்சல் புயல் 3 மணிநேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கரையைக் கடந்த புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்சல புயல் 35 மணி நேரம் பயணித்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடந்தது.

11.30 மணிக்கு பெரும்பாலான பகுதிகள் கரையை கடந்தாலும் 1.30 மணிக்கே முழுமையாக அந்த புயலின் பாகம் கரையை கடந்தது. அடுத்த 3 மணி நேரத்தில் இது வலிமை இழக்கும். இதனால் அடுத்த 3 மணி நேரம் முக்கியம் ஆகும். ஏனென்றால் இந்த புயல் தற்போது Pull Effect எனப்படும் இழுவை காரணமாக கூடுதலாக மேகங்களை இழுத்து வந்துள்ளது. இந்த மேகங்கள் மழையை கொடுக்கும். இப்படி மழையை கொடுப்பதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல காற்றும், மழையும் நீடிக்கும். சென்னையில் 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது. நேற்று இரவு 10 மணி நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 3,675 கனடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 4,217 கன அடியாக அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ மழைப் பதிவு ஆகி உள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 12% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்த மழைக்கு இடையே சென்னைக்கு ஒரே ஒரு பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது. கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதுரவாயில், வானகரம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 6 இடங்களில் 15+ செ.மீ-க்கு மேல் மழை பதிவு. அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் மற்றும் பேசின் ப்ரிட்ஜ் பகுதியில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவொற்றியூர், மீனம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயலில் 13 செ.மீ மற்றும் தண்டையார்பேட்டையில் 14 செ.மீ. மழை பதிவு ஆகி உள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை நேற்று காலை வரை இயல்பை விட 20% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த மழைக்கு இடையே சென்னைக்கு ஒரே ஒரு பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதன்படி சென்னை மாநகருக்கு தேவையான மழை நீர் கிடைத்துள்ளது. நகரின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 3,675 கனடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 4,217 கன அடியாக அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ மழைப் பதிவு ஆகி உள்ளது.

The post சென்னையில் 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உயர்வு: வினாடிக்கு 4,217 கனஅடி நீர்வரத்து appeared first on Dinakaran.

Tags : Semerbambakkam Lake ,Chennai ,Srembarambakkam Lake ,Fengel ,Puducherry ,Chemerbakkam Lake ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்