×

பெரம்பலூரில் சின்ன வெங்காய சாகுபடி பாதிப்பு: நீர்நிலைகள் நிரம்பியதால் நெல்சாகுபடிக்கு மாறிய விவசாயிகள்!!!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பியதால் காரணமாக சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் நெல் சாகுபடிக்கு மாறியுள்ளனர். ஆடி மற்றும் ஐப்பசி பருவங்களில் அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திருச்சி, சென்னை, ஒட்டஞ்சத்திரம் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆண்டு முழுவதும் வெங்காயத்தை மட்டுமே சாகுபடி செய்த விவசாயிகள் 40 ஆண்டுகளுக்கு பிறகு நெல் பயிரிட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செட்டிகுளம், நாட்டார்மங்கலம் ஆகிய பகுதிகளில் வெங்காய பட்டறைகள் வெறிசோடி காணப்படுகின்றன. உற்பத்தி இல்லாததால் சின்ன வெங்காயத்தின் விலை இரட்டிப்பாக உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். சிதம்பரம்: தொடர் மழையால் சிதம்பரம் அருகே இளநாகூர், சாலியன்தோப்பு, வக்காரமாரி ஆகிய ஊர்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. வயல்களில் தேங்கிய மழைநீர் வடியாததால் சாய்ந்துள்ள நெற்கதிர்கள் முளைத்து விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். போதிய வடிகால் வசதி இல்லாததால் வயல்களில் தேங்கிய மழைநீர் வடியவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு           பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்….

The post பெரம்பலூரில் சின்ன வெங்காய சாகுபடி பாதிப்பு: நீர்நிலைகள் நிரம்பியதால் நெல்சாகுபடிக்கு மாறிய விவசாயிகள்!!! appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur district ,Audi ,Nelsakupi ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...