×

துங்கபுரம் வடக்கு கிராமத்தில் டிச. 11ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

 

பெரம்பலூர், நவ.30: பெரம்பலூர் மாவட்டகலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, துங்கபுரம் (வடக்கு) கிராமத்தில் வரும் டிசம்பர் 11ஆம் தேதி புதன் கிழமை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே, துங்கபுரம் (வடக்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை துங்கபுரம் (வடக்கு) கிராம நிர்வாக அலுவலகத்தில், முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன் பெறுமாறு மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post துங்கபுரம் வடக்கு கிராமத்தில் டிச. 11ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Tungapuram North Village ,Relations Project ,Perambalur ,Perambalur District ,Collector ,Grace Bachau ,Gunnam Taluk ,Tungapuram ,North ,Perambalur District Collector Public Relations Project Camp ,Village ,Public Relations Project Camp ,Dinakaran ,
× RELATED மக்கள் தொடர்பு திட்ட முகாம்