×

சிகிச்சைக்கு வந்த பெண் திடீர் மாயம்

சேலம், நவ.30: ராசிபுரம் அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மலர்(43). இந்நிலையில் மலர், தனக்கு உடலில் அரிப்பு இருப்பதாக கூறிவந்துள்ளார். இதற்காக அவர் மாதம் ஒரு முறை சேலம் டவுன் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்வார். அதேபோல் கடந்த 25ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் அதன்பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை, ராஜ் தொடர்பு கொள்ள முயன்றபோது முதலில், தான் சேலம் டவுன் பகுதியில் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் மீண்டும் போன் செய்தபோது அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுபற்றி சேலம் டவுன் காவல் நிலையத்தில் ராஜ் புகார் அளித்தார். அப்போது போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, மலர் அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசி வருவார் என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் மலர் யாரிடமெல்லாம் அடிக்கடி போனில் பேசியுள்ளார், அவர் எங்கு சென்றார் என இன்ஸ்பெக்டர் சந்திரகலா விசாரணை செய்து வருகிறார்.

The post சிகிச்சைக்கு வந்த பெண் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Raj ,Minnampalli ,Rasipuram ,Malar ,Salem Town ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...