×
Saravana Stores

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட பத்திரிகையாளர் நலவாரியத்தில் 3,300 உறுப்பினர்கள் இணைப்பு: அமைச்சர் சாமிநாதன் தகவல்

சென்னை: அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: பத்திரிகையாளர்களின் நலனை காக்கும் பொருட்டு இந்த அரசு பொறுப்பேற்று ‘பத்திரிகையாளர் நலவாரியம்’ உருவாக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் 3300 பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். நலவாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட 21 வகையான நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது. மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் பத்திரிகையாளர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்த செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டை வழங்கப்படாமலும், அதற்கான குழுவும் அமைக்கப்படாமலும் இருந்தது; தற்போதைய அரசு, ஆட்சி பெறுப்பேற்றவுடன் அதற்கான குழு அமைக்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை தமிழ்நாடு முழுவதும் 2431 செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 446 செய்தியாளர்களுக்கு சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பத்திரிகையாளர் நலவாரிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம், மறைந்த செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. “நான் முதலில் பத்திரிகையாளன்; பிறகுதான் அரசியல்வாதி” என்பார் கலைஞர். அவர் காட்டிய வழியில் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாகவும் அவர்களின் நலன்களை காப்பதில் மிகுந்த அக்கறையுடனும் செயலாற்றி வருகிறது. இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட பத்திரிகையாளர் நலவாரியத்தில் 3,300 உறுப்பினர்கள் இணைப்பு: அமைச்சர் சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Journalists' Welfare Board ,Chief Minister ,M. K. Stalin ,Minister ,Saminathan ,Chennai ,Journalists Welfare Board ,Welfare Board ,Journalist Welfare Board ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண...