திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ3 கோடியே 70 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, நேற்று நடந்தது.
கோயில் உண்டியலில் ரூ3 கோடியே 70 லட்சத்து 99ஆயிரத்து 526, மற்றும் 230 கிராம் தங்கம், 1கிலோ 140 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் செலுத்தப்பட்டிருந்தது.
The post திருவண்ணாமலை கோயிலில் ரூ3.70 கோடி காணிக்கை appeared first on Dinakaran.