×

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளரான நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

திருவனந்தபுரம்: மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பாளரும் நடிகருமான, சவுபின் சாஹிரின் கொச்சியிலுள்ள அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கருப்புப் பணத்தை முதலீடு செய்தது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் இந்த வருடம் பிப்ரவரியில் வெளியாகி கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் மஞ்சும்மல் பாய்ஸ். வெறும் ₹20 கோடி செலவில் மட்டுமே தயாரான இந்தப் படம் ₹242 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதுதான் மலையாளத்தில் ₹200 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டிலும் ₹50 கோடிக்கு மேல் வசூலித்து இந்தப் படம் சாதனை படைத்தது. தமிழ்நாட்டில் ஒரு நேரடி பிறமொழிப் படம் ₹50 கோடிக்கு மேல் வசூலிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் நாயகனான சவுபின் சாஹிர் தான் இதன் முக்கிய தயாரிப்பாளர் ஆவார். ந்தநிலையில் இந்தப் படத்தயாரிப்பில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை கொச்சியில் உள்ள சவுபின் சாஹிரின் படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் இந்தப் படத்தில் பல கோடிக்கு கருப்புப் பணம் முதலீடு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தயாரிப்பாளர் சவுபின் சாஹிரிடம் வருமான வரித்துறையினர் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

The post ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளரான நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Soubin Sahir ,Income Tax Department ,THIRUVANANTHAPURAM ,Kochi ,Manjummal Boys ,Saubin Sahir ,Malayalam ,Kerala ,Tamil Nadu ,Manjummal ,Dinakaran ,
× RELATED மத்தியபிரதேசத்தில் 52 கிலோ தங்கம், ரூ.11...